advertisement

தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு:வானிலை மையம் எச்சரிக்கை

ஏப். 10, 2025 10:43 முற்பகல் |

 

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 - 3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்,'' என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து, வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பி. அமுதா கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரியின் மைலாடி, கொட்டாரம் பகுதியில் தலா 6 செ.மீ., கன்னிமார், மாம்பழத்துறையாறு பகுதிகளில் தலா 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.நேற்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மாலை 5:30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து இன்று காலை 8:309மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.

இன்று( ஏப்.,10) முதல் 12 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement