தமிழகத்தில் சிறுநீரக கடத்தல் நடைபெற்று வருகிறது - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே எந்த விரிசலும் கிடையாது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,தமிழகத்தில் திமுக அரசாங்கத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கும்போது மக்களை சந்தித்து பிரசாரம் செய்யுமாறு திமுகவினருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்,
மதுரையில் ஐந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் உடனே பதவி விலக வேண்டுமென அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது என முதலமைச்சரே கூறியுள்ளார், அப்படி என்றால் இத்தனை நாள் கொள்ளை அடித்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தானே அர்த்தம். எதுவுமே சரியாக நடக்கவில்லை என்பது முதலமைச்சரின் வாயிலே வந்து கொண்டிருக்கிறது.
மணல் கடத்தல் இப்போது ஜல்லி கடத்தல் ஆகியுள்ளது. தமிழகத்தில் சிறுநீரக கடத்தல் நடந்து வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முறைகேடு செய்தது நாமக்கல்லில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திமுக கட்சியை சேர்ந்தவர் நடத்தும் பிரம்மாண்ட மருத்துவமனையில் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சை விதிகளுக்கு மாற்றாக விதிகளை மீறி மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளது.
அதிமுக ஆட்சியில் மகளிருக்கு 1500 ரூபாய் கொடுத்தாலும் டாஸ்மாக்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த எங்களிடம் திட்டம் உள்ளது. ஸ்டாலின் போல முன்வாசலில் கொடுத்துவிட்டு பின் வாசலில் பிடுங்குவது நாங்கள் அல்ல. இந்தியா கூட்டணியில்தான் பிரேக் இருக்குமே தவிர, என்.டி.ஏ கூட்டணியில் பிரேக் எதுவும் இல்லை' என தெரிவித்தார்.
கருத்துக்கள்