advertisement

குயவன்குடியில் " உங்களுடன் ஸ்டாலின் " திட்ட முகாம் -கலெக்டர் ஆய்வு

ஜூலை 19, 2025 8:55 முற்பகல் |

குயவன்குடி ஊராட்சியில் நடைபெற்ற  " உங்களுடன் ஸ்டாலின் " திட்ட முகாமை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், குயவன்குடி ஊராட்சியில்  "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நடைபெற்றதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது , ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், குயவன்குடி ஊராட்சியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை பார்வையிட்டதுடன் , பொதுமக்கள் மனுக்கள் வழங்கி வருவதை பார்வையிட்டு பொதுமக்களிடம் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தத்துடன் அரங்கு அமைந்துள்ள ஒவ்வொரு அரசுத்துறைகளிலும் அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்களிடம் பெறக்கூடிய மனுக்களை உரிய ஆவணங்களுடன் கணினியில் பதிவு செய்திட வேண்டுமென அறிவுறுத்தியதுடன் ஒவ்வொரு முகாமிலும் 13 அரசுத்துறைகளிலிருந்து 43 சேவைகள் வழங்கிட ஏதுவாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடும் வகையில் உங்கள் பகுதிக்கு வந்து அரசுத்துறை அலுவலர்கள் முகாமிட்டு மனுக்கள் பெறுவதால் இதுபோன்ற நல்வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் , மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சோமசுந்தரம் , ஜெயமுருகன், செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement