advertisement

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஜூலை 19, 2025 3:14 முற்பகல் |

 

குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை தொடங்க உள்ளதால் முன்னேற்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.

தொடர்மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

இந்த சூழலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குற்றால சாரல் திருவிழா பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், தென்காசி மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைக்கின்றனர்.
இதையொட்டி கலைவாணர் அரங்கம், ரெயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்குகள் அமைக்கும் பணி என முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement