advertisement

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

ஜூலை 19, 2025 5:59 முற்பகல் |

 

நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியதும் குழந்தை இல்லாத பெண்கள் காந்திமதி அம்மனுக்கு  10 நாட்களும் விரதம் கடைபிடித்து வருவார்கள்.

 ஆண்டுதோறும் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 10 நாட்கள்  கொண்டாடப்படுவது வழக்கம் . அந்தவகையில் இந்த ஆண்டு ஆடிப்பூர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை காந்திமதி அம்மன் சன்னதி முன்புள்ள கொடிமரத்தில்  கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதனை தொடர்ந்து 4-ம் திருவிழாவான 21-ம்தேதி மதியம்  காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம், இரவு அம்மன் திருவீதி உலா நடக்கிறது. 10-ம் திருநாளான வருகிற 27-ம்தேதி மாலை  ஊஞ்சல் மண்டபத்தில் ஆடிப்பூரம் முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement