அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணை தீவிரம்
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் அஜித்குமார் வீட்டில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் காவலாளியாக இருந்த அஜித்குமார் (29), நகை திருட்டு புகார் விசாரணையின் போது மானாமதுரை தனிப்படை போலீசாரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.சம்பவத்தில் தொடர்புடைய தனிப்படை போலீசார் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, மடப்புரம் கோவில் அலுவலகம், அஜித்குமார் தாக்கப்பட்ட இடம் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். கோவில் அதிகாரியின் டிரைவர் கார்த்திவேல், அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார், ஆட்டோ டிரைவர் அருண்குமார், மற்றும் பணியாளர்கள் வினோத்குமார், பிரவீன் ஆகிய 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
அஜித்குமார் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் மதுரை-ராமேஸ்வரம் சாலையில் உள்ள பேக்கரி கடை சிசிடிவி காட்சிகள் ஆகியவை சிபிஐயால் பரிசோதிக்கப்பட்டு, சம்பவ விவரங்கள் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துக்கள்