திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை
திருவள்ளுர் அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சிறுமியின் தாய் கண்ணீர்மல்க பேட்டி அளித்து உள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருபவர் 10 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, ஆதம்பாக்கம் ரயில் நிலையத்தை கடந்து மாந்தோப்பு வழியாக 8 வயது சிறுமி நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியை பின் தொடர்ந்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பின்னர் அந்த மர்ம நபர் ஹிந்தியில் தனது செல்போனில் வேறொரு நபரை அழைத்து உள்ளார். இதனை கேட்ட சிறுமி உடனே தரையிலிருந்த மண்ணைவாரி மர்ப நபர் முகத்தில் தூவிவிட்டு தப்பி ஓடியுள்ளார். பின்னர் ஆடைகள் கிழிந்து முகத்தில் காயங்களுடன் வீட்டிற்கு வந்த சிறுமியை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து விசாரித்த போது தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.ஆனால் புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சிறுமியின் பெற்றோர் குற்றம் சாட்டினர்.இதனை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி கும்முடிபூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறியுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவத்தை கும்மிடிப்பூண்டி எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் பாதிக்கப்பட்டு 8 வயது சிறுமியிடம் தனியாக சென்று விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு பதிவு செய்தனர்.
மேலும் விசாரணையில் 10 வயது சிறுமி நடந்து சென்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து சென்று வலுக்கட்டாயமாக முட்புதரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கருத்துக்கள்