தூத்துக்குடியில் ஜூலை 19 ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!
ஜூலை 18, 2025 11:57 முற்பகல் |
தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 19) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மின் பகிர்மான வட்டம், முத்தையாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 19) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் முள்ளக்காடு பிரிவிற்குட்பட்ட அபிராமி நகர், கீதா நகர், ஆதிபராசக்தி நகர், சவேரியார்புரம், ராஜிவ்நகர், நேருஜி நகர், கக்கன்ஜிநகர், முள்ளக்காடு, காந்திநகர், நேசமணிநகர், சுனாமி காலனி, பொட்டல் காடு, மற்றும் கோவளம் உப்பளம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்