advertisement

சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறியவருக்கு 3 ஆண்டு சிறை

ஜூலை 19, 2025 3:06 முற்பகல் |

 

சிறுமிகளிடம் பாலியல் செய்கை செய்த வழக்கில் கைதானவருக்கு 3 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

கழுகுமலை பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 6 சிறுமிகளிடம் பாலியல் செய்கை செய்த வழக்கில் கழுகுமலை பகுதியைச் சேர்ந்த முத்தையா மகன் ஏசுராஜ் (54/25) என்பவரை கழுகுமலை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா இன்று (18.07.2025) குற்றவாளியான ஏசுராஜ்-க்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.12,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் கஸ்தூரி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலட்சுமி, விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் சேதுராஜன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement