உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் -ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 15ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் 16741 மனுக்கள் பெறப்பட்டுள்ளது,
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகள் என அனைத்துப் பகுதிகளிலும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 15.07.2025 முதல் 18.07.2025 நடைபெற்ற இச்சிறப்பு திட்ட முகாமில் மொத்தம் 16741 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
பிற துறைச்சார்ந்த 7173 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவது தொடர்பாக 9568 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 4410 மனுக்கள் 45 நாட்களுக்குள் தீர்வு காணக்கூடிய மனுக்களாக பெறப்பட்டுள்ளது. 2783 மனுக்கள் 45 நாட்களுக்கு அதிகமாக தீர்வு காணக்கூடிய மனுக்களாக பெறப்பட்டுள்ளது. பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காண அரசு அலுவலர்களுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்
கருத்துக்கள்