advertisement

லக்னோவில் பேருந்தில் தீ விபத்து - குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு

மே 15, 2025 10:15 முற்பகல் |

 லக்னோவில் டபுள் டெக்கர் பஸ்சில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் 2 பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பீஹாரில் இருந்து டில்லிக்கு டபுள் டெக்கர் பஸ்சில் 70க்கும் மேற்பட்டோர் சென்று கொண்டிருந்தனர். 

லக்னோ அருகே பஸ் சென்று கொண்டு இருந்த போது தீ விபத்து ஏற்பட்டது. உள்ளூர்வாசிகளும், தீயணைப்பு படையினருடன் இணைந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில், குழந்தைகள் 2 பேர் உட்பட 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், சம்பவ இடத்தில் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் மாவட்ட நிர்வாகத்திற்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement