மெக்சிகோவில் டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
மெக்சிகோவில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்ஸூம், டிரக்கும் மோதிக் கொண்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய மெக்சிகோவின் பூப்லா – ஒக்ஸாகா தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரு வாகனங்களும் மோதிய பிறகு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சிக்கி 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மெக்சிகோவில் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அலட்சியமாக வாகனங்களை ஓட்டுவது, டிரைவரின் சோர்வு காரணமாக சரக்கு லாரிகள் விபத்தில் சிக்குவது கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரையில் காம்பேச் மற்றும் பிற பகுதிகளில் மட்டும் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, சாலை விபத்துக்களை தடுக்க கடுமையான விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கருத்துக்கள்