கடலூர் சிப்காட்டில் வெடித்து சிதறிய டேங்கர் -பரபரப்பு
கடலூரில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில், பல்வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதில் கெமிக்கல் நிறுவனத்தில் வேதிமருந்துகள் இறக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில் 6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் கொண்ட டேங்கர் திடீரென வெடித்து சிதறியது.
இதனால், அருகில் உள்ள வீடுகளுக்குள் ரசாயன நீர் புகுந்தது. இதனால், கண்எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரசாயன நீர் புகுந்ததைக் கண்டித்து கடலூர் - சிதம்பரம் சாலையில் மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் டேங்கர் வெடித்ததுக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்கள்