வஉசி துறைமுகத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி!
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி போர் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய வளாகத்தில் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி போர் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் நேற்று (10.05.2025) மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
மேற்படி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய வளாகத்தில் எதிர்பாராத விதமாக ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட துறைகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போர் பாதுகாப்பு ஒத்திகைப்பயிற்சி நடைபெற்றது.
பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை வீர்ர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு, வேறு எவரேனும் பாதிக்கப்படவில்லை என உறுதி அளிப்பது, மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, காவல்துறை மூலமாக பாதுகாப்பு வழங்கப்படுவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர், பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது உறுதி செய்யப்பட்டவுடன், மாவட்ட ஆட்சியரால் உரிய அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
கருத்துக்கள்