தூத்துக்குடியில் தோழி பணிபுாியும் மகளிா் விடுதி திறப்பு விழா
தூத்துக்குடி சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை சாா்பில் பணிபுாியும் மகளிர்கள் பயன்பெறும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் தொடங்கப்பட்ட தோழி பணிபுாியும் மகளிா் விடுதி திறப்பு விழா ஆசிாியர் காலனியில் நடைபெற்றது.
விழாவிற்கு கலெக்டர் இளம்பகவத், தலைமை வகித்தாா். வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஆணையர் மதுபாலன், மேயர் ஜெகன்பொியசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனா். சமூகநலன் அலுவலா் பிரேமலதா வரவேற்புரையாற்றினாா். மகளிா் விடுதியை கனிமொழி எம்.பி திறந்து வைத்து சத்ய வானி முத்து அம்மையாா் நினைவு திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில், தமிழக முதலமைச்சா் முக.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்துள்ள நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். அதன் ஓரு பகுதியாக தமிழகம் முழுவதும் மகளிா்கள் தங்குவதற்கென்று தோழி விடுதிகள் அமைக்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கையின் படி தமிழகத்தில் உள்ள பெண்கள் 42 சதவீதம் பேர் பணிபுாிபவராக இருக்கிறீா்கள் என்றார் மேலும் இதை பெண்கள் சரியாக பயன்படுத்தி காெள்ள வேண்டும் என தெரிவித்தார்.
அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இதுபோன்ற விடுதிகள் செயல்பட்டாலும் தமிழகத்தில் புதிதாக 10 விடுதிகள் கட்டுவதற்கு இந்த ஆண்டு 107 கோடியே 95லட்சம் மதிப்பீல் கட்டப்படவுள்ளது. எல்லா தரப்பினரும் இந்த தோழி விடுதியின் மூலம் பயன்பெற்றுக்காௌ்ளலாம். குழந்தைகளோடும் தங்குவதற்கான அனைத்து கட்டமைப்புகளோடு 24 மணி நேரமும் கண்காணிப்பு கேமரா பாதுகாப்புடன் இயங்கும் அதற்கு ஒரு பணியாளரும் பாதுகாவலராகவும் இருப்பாா். இப்படி எல்லா வகையிலும் தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் முதலமைச்சருக்கு அனைவரும் துணையாக இருக்க வேண்டும் என்று பேசினாா்.
விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத்தலைவர் அன்னலட்சுமி, கவுன்சிலர்கள் சந்திரபோஸ், பொன்னப்பன், இசக்கிராஜா, கனகராஜ், கண்ணன், கந்தசாமி, மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமாா், பழனி, மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாநகரஅணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அல்பட் செய்திமக்கள் தொடர்பு உதவி அலுவலா் முத்துக்குமாா் உள்பட பலர் கலந்து கொண்டனா். கோவில்பட்டி ஓருங்கிணைந்து சேவை மைய நிர்வாகி பொன்னுமாாி நன்றியுரையாற்றினாா்.
கருத்துக்கள்