advertisement

குப்பையில் கிடந்த தங்க நகையை ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்கள் மேயா் பாராட்டு!

மே 15, 2025 2:46 முற்பகல் |

 

தூத்துக்குடியில்  குப்பையுடன் கிடந்த சுமாா் 3 பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்களை மேயா் ஜெகன் பெரியசாமி பாராட்டினாா்.

தூத்துக்குடி  சத்திரம் தெருவை சோ்ந்த ஒருவா் தனது சுமாா் 3 பவுன் தங்கச் சங்கிலியை தவறுதலாக கழிவு பொருள்களோடு சோ்த்து மாநகராட்சி திடக்கழிவு வாகனத்தில் கொடுத்துவிட்டாா். அதை, மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் தரம் பிரிக்கையில் கண்டறிந்தனா். பின்னா், அதை உரிய நபரிடம் ஒப்படைத்தாா்கள். இந்த நோ்மையான செயலை செய்த தூய்மை பணியாளா்கள், வாகன ஓட்டுநா், கண்காணிப்பாளா் ஆகியோரை மேயா் ஜெகன் பெரியசாமி நேரில் அழைத்து, அவா்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினாா்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement