அமெரிக்கா போதைக்கு மருந்து சாக்கில் பெண்களின் கற்பை சூறையாடிய டாக்டர்!
கிளினிக்கில் வந்த பல பெண்களை போதைக்கு மருந்து தரும் சாக்கில் பாலியல் உறவுக்கு பயன்படுத்திய கற்பை சூறையாடிய டாக்டர் ரூ.86 லட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டார்;
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தின் செகாகஸ் பகுதியை சேர்ந்தவர் இந்திய வம்சாவளி டாக்டர் ரித்தேஷ் கல்ரா (51), இவர் தனது கிளினிக்கில் வந்த பல பெண்களை போதைக்கு மருந்து தரும் சாக்கில் பாலியல் உறவுக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது .
ரித்தேஷ் கல்ரா ஆக்சிகோடன் போன்ற சக்திவாய்ந்த ஓபியாய்டு மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்கி, அவர்களை போதைக்கு அடிமையாக வைத்துக் கொண்டு கற்பை சூறையாடியடி உள்ளார். போதைக்கு அடிமையானவர்களிடம் மருந்து தருகிறேன் என கூறி அவர்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி கொண்டார். இதில், பல்வேறு வடிவிலான பாலியல் உறவில் அவர் ஈடுபட்டு உள்ளார்.
பெண் ஒருவர், இவருடைய கிளினிக்கிற்கு பல முறை மருந்து வாங்க சென்றுள்ளார். அப்போது ஒவ்வொரு முறையும், அவரை பாலியல் விருப்பத்திற்கு கல்ரா பயன்படுத்தி கொண்டார் என அந்த பெண் அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இந்த விவகாரம் அமெரிக்க கோர்ட்டில் விசாரணைக்கு சென்றது.பல பெண் நோயாளிகள் அவருக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் புகார்கள் அளித்துள்ளனர்.
அமெரிக்க கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற, ரூ.86 லட்சம் பிணையில் கல்ரா விடுவிக்கப்பட்டார்; வீட்டு காவல் உத்தரவு பிற்பிக்கப்பட்டது.மருத்துவ பணியிலோ அல்லது மருந்துகளை எழுதி கொடுப்பதோ கூடாது என தடையும் விதிக்கப்பட்டது.
மருத்துவ உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தவழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.
கருத்துக்கள்