ரஷ்யா சாலை விபத்து; 19 தொழிலாளர்கள் பலி
ரஷியாவில் பாதுகாப்பு குறைபாடுகளால் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன என விசாரணை அதிகாரிகள் சுட்டி காட்டுகின்றனர்.
ரஷியாவின் கிழக்கே யகுதியா பகுதியில் சுரங்க தொழிலாளர்கள் சிலரை ஏற்றி கொண்டு பஸ் ஒன்று சென்றது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ், சாலையில் இருந்து விலகி ஓடியது என கூறப்படுகிறது.இதில் பஸ், 82 அடி ஆழ பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில், 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர் என உள்துறை அமைச்சக செய்தி தெரிவிக்கின்றது.
இந்த விபத்து, டெனிசோவ்ஸ்கி சுரங்கம் மற்றும் பதப்படுத்தும் ஆலை அமைந்த சாலையில் நடந்துள்ளது. இந்த ஆலையில் நிலக்கரி பதப்படுத்தும் பணி நடந்து வருகிறது.ரஷியாவில் இதுபோன்ற தொழிற்சாலை சார்ந்த விபத்துகள் நடப்பது பரவலாக காணப்படுகிறது என கூறப்படுகிறது. பாதுகாப்பு குறைபாடுகளால் இதுபோன்ற விபத்துகள் நடக்கின்றன என விசாரணை அதிகாரிகள் சுட்டி காட்டுகின்றனர்.இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்ச்சியாக இன்று ஒரு நாள் இரங்கல் கடைப்பிடிக்கப்படும் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துக்கள்