ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா படம் நாளை வெளியாகும் - சுரேஷ் கோபி தகவல்
ஜூலை 17, 2025 9:32 முற்பகல் |
ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா படத்துக்கு சென்சார் வாரியம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து படம் நாளை வெளியாகும் என மத்திய அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், பிரவின் நாராயணன் இயக்கத்தில் வெளியாகும் படத்துக்கு ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா என பெயரிடப்பட்டுஇருந்தது. இது கடவுள் சீதையின் மறு பெயர் என்பதால் படத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மறுப்பு தெரிவித்தது.
இதை எதிர்த்து அந்த படத் தயாரிப்பு நிறுவனம், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தலைப்பை மாற்ற கோரினார். ஆனால், பட வெளியீட்டுக்கு குறைவான நாட்கள் இருப்பதால் மாற்ற முடியாது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது
கருத்துக்கள்