advertisement

சாலை போடாமல் பொது மக்களை ஏமாற்றி கையெழுத்து பெறும் ஊரக நிர்வாகம்-உப தலைவர் குற்றச்சாட்டு

ஜூலை 17, 2025 8:04 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (MGNREGS) கீழ் கடந்த 2018–19 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், கிழக்கு தெருவில் சிமெண்ட் சாலை (CC Road) அமைக்கும் பணி, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பணிக்காக ரூ.30,912 பணியாளர்களுக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதையும், தற்போது ரூ.2,58,169.55 மதிப்பிலான புதிய வவுச்சர்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆவணங்கள் கூறுகின்றன.

ஆனால், அவ்விடம் இன்று வரை எந்த சாலை பணியும் நடைபெறவில்லை. அதற்கு சிவஞானபுரம் பகுதியில்  அம்மன் கோவிலுக்கு கீழ்புறம் சாலை அமைக்கப்பட்டதாக அதிகாரிகள் பொய் பதில் அளித்துள்ளனர். இது தொடர்பான எந்த geotagging, புகைப்படங்கள், M-Book பதிவு, அல்லது NREGASoft பதிவும் இல்லை.சாலை மாற்றி அமைத்ததற்காக மாவட்ட ஆட்சியர் ஆணை அளித்த நகலும் நூறுநாள் திட்ட பதிவேட்டிலும் இல்லை. மேலும், 2019–2025 காலாண்டிற்கான சமூக ஆய்வுப் பதிவுகளிலும் இந்த வேலை எங்கு இடம்பெறவில்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளன.

முக்கியமாக, இந்த முறைகேடு குறித்து புகார் அளித்த பொதுமக்களுக்கு பதிலளிக்கத் தயாரான அலுவலர், தேதியின்றி பொதுமக்களை ஏமாற்றி கையெழுத்து  வாங்கி நூறுநாள்  சட்டவிதிமுறைக்கு மீறி  தயாரிக்கப்பட்ட பதிலை வழங்கியதோடு, திட்டத்தில் இடம்பெறாத பழைய சாலையை காட்டி பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கியுள்ளார். இது திட்ட விதிமீறலாகவும், பொதுமக்களை ஏமாற்றியதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

சட்டவழி மீறல்கள்:

MGNREGS சட்டம் பிரிவு 13 & 17 – திட்ட பணிகளை மாற்றுவது முற்றிலும் சட்டவிரோதம்.

தமிழ்நாடு ஊராட்சி சட்டம், 1994 – ஒப்புதல் பெற்ற பணிக்கே நிதி செலவிடப்பட வேண்டும்.

IPC பிரிவுகள் 420, 468, 471 – பொய் ஆவணங்கள், நிதி மோசடி குற்றங்கள்.

பொது மக்கள் தரும் கோரிக்கைகள்:

1. சம்பந்தப்பட்ட முறைகேடுகளை  ஆய்வு செய்து பொது மக்களிடமிருந்து தவறான தகவலை அளித்து தேதியில்லாத  சட்டவிரோதமாக பெற்ற கையெழுத்துகள் விசாரிக்கப்பட வேண்டும் என சேர்வைக்காரன்மடம் ஊர் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா முதல்வருக்கும் சம்பந்தபட்ட ஊராட்சி அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளித்துள்ளார்.மேலும் ஊராட்சி உபதலைவர் குறிப்பிடுகையில் தாய் ஊரான சேர்வைக்காரன்மடம் கிழக்கு பகுதி மக்களை ஏமாற்றியும்  கையெழுத்திட்ட சிவஞானபுரம்  பொதுமக்களை ஏமாற்றிய செயலாகும் என்றார்.இதனை தொடர்ந்து, முதல்வருக்கு மற்றும் அனைத்து உள்ளாட்சி துறை உயரதிகாரிகளுக்கும் PG Portal வாயிலாக மேல்முறையீடு மனு அனுப்பப்பட்டுள்ளதுடன், ஆதார ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன என்றும் கூறினார்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement