advertisement

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் இறுதி விடைக்குறிப்பு வெளியீடு

ஜன. 10, 2025 6:24 முற்பகல் |

2024 ஜூன் 9-ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் இறுதி விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளின் தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி பட்டியல் வெளியான பின்னரே இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும். ஆனால், இந்த முறை முதன் முறையாக இறுதி பட்டியல் வெளியிடுவதற்கும் முன்னரே இறுதி விடைக்குறிப்பு வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2024 விடைக்குறிப்பை பதிவிறக்கம் செய்வது எப்படி?

படி 1 : டிஎன்பிஎஸ்சி-யின் https://tnpsc.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு செல்லவும்.
படி 2 : மேலே நீள நிற பகுதியில் “Recruitment"என்பதை கிளிக் செய்யவும்.
படி 3: அதன் கீழே பல்வேறு ஆப்சன்கள் இருக்கும். அதில் ”Question paper/ Answer Key" என இருப்பதை கிளிக் செய்யவும்.
படி 4 : அதனைத்தொடர்ந்து, அதில் ”Objective Type (with Answer keys) என இருக்கும். அதனை கிளிக் செய்யவும்.
படி 5: அதில் 9வது இடத்தில் ”Group-IV Services" என இருக்கும். அதில் இறுதி விடைக்குறிப்பு (09.01.2025) என்ற தேதியில் வெளியிடப்பட்டு உள்ளது.
படி 6: அதனை கிளிக் செய்யவும். தொடர்ந்து ஒரு PDF பக்கம் திறக்கம். அதில் விடைக்குறிப்புகளை சரிப்பாத்துக் கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி முதல் முறை விடைக்குறிப்புகளை இறுதி பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு வெளியிடுகிறது. இதனால், தேர்வர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை சரிபார்த்து கொள்ள முடியும்.

குரூப் 4 கலந்தாய்வு தேதி
நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 22.01.2025 முதல் தொடங்கி 12.03.2025 தேதி வரை நடைபெறும். இதன் இடையே உள்ள அரசு விடுமுறை நாட்கள் (06.02.2025, 07.02.2025, 18.02.2025, 19.02.2025, 20.02.2025, 21.02.2025 மற்றும் 07.03.2025) தவிர அனைத்து நாட்களில் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் கலந்தாய்வு குறித்த தகவல்கள் தொலைபேசி எண்ணிற்கும், இமெயில் முகவரிக்கு இத்தகவல் பகிரப்படும்.

கூடுதலாக 41 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ஏற்கனவே 3 முறை காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 41 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement