விஜய் வருகை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் - பேட்டி
விஜய் வருகை 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் பிரேமலதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்க வரிவிதிப்பில் ஏற்றுமதி இறக்குமதியில் ஈடுபடும் இந்தியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
ஏற்கனவே நமது நாட்டில் ஜிஎஸ்டி போன்ற வரிகளால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் அமெரிக்காவின் இந்த வரி உயர்வால் இந்தியாவில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். மத்திய அரசு உடனடியாக அமெரிக்காவிடம் பேசி பிரதமர் சரி செய்து நமது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.
தேர்தல் ஆணையம் சரி செய்ய வேண்டும். ஒரு மாநிலத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் சரி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் தான் இதற்கு சரியான முடிவு எடுத்து சொல்ல வேண்டும். இல்லை என்றால் தேர்தலில் நிற்பதே வேஸ்ட். தேர்தல் வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை. தேர்தல் வருகிறது என்றவுடன் புதிதாக பல வாக்குறுதிகளை கொடுக்கின்றனர் என்றார்.
கருத்துக்கள்