அதிமுக கூட்டணியில் விசிக.,வைஅழைத்த இபிஎஸ் - விசிக கொடுத்த பதில்!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “வரவிருக்கும் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு வழங்கப்படும் தொகுதி இடங்கள் குறைக்கப்படும் வாய்ப்பு அதிகம்.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அசிங்கப்பட்டு நிற்கின்றன. ஆனால், அதிமுக நாங்கள் கூட்டணி கட்சிகளை ரத்தினக் கம்பளத்துடன் வரவேற்போம்” என அவர் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த மறைமுக கூட்டணி அழைப்புக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு பதிலளித்து உள்ளார்.
அதில், “திமுக கூட்டணியில் விசிக வலிமையாக உள்ளது. எங்கள் கூட்டணி உறுதிப் போக்கில் மாற்றமில்லை. அதிமுக ஆட்சி காலத்திலும் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்பது உண்மைதான்” எனக் கூறினார்.
கருத்துக்கள்