டிஎன்பிஎஸ்சி குரூப் 2தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு ,கலந்தாய்வு தேதி அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2 தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் ஜூலை 22 முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த வாரம் குரூப் 2 தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து சென்னை பிராட்வேயிலுள்ள தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அழைக்கப்படும் தேர்வர்களின் பெயர்பட்டியல், கலந்தாய்வுக்கான நாள், நேரம், அழைப்பாணை உள்ளிட்ட விவரங்கள் [www.tnpsc.gov.in](http://www.tnpsc.gov.in) என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்கள் அழைப்பாணையை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். இந்நிகழ்ச்சியில் தவறாமல் பங்கேற்பது கட்டாயம். தவறினால் மறுவாய்ப்பு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கான தற்காலிக பட்டியலும் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துக்கள்