advertisement

மும்பை -  ஓடுபாதையை விட்டு விலகிச் சென்ற 'ஏர் இந்தியா' விமானம்

ஜூலை 21, 2025 10:21 முற்பகல் |

 

கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் ஏ.ஐ.2744 விமானம், மும்பை விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியது. அப்போது அங்கு கனமழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் தரையிறங்கும்போது ஓடுபாதையில் இருந்து சற்று விலகிச் சென்றது.

இருப்பினும் விமானம் எந்த பிரச்சினையும் இன்றி பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும், அதில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக(DGCA) அதிகாரிகள், நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், விமானத்தில் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement