கேரள முன்னாள் முதல்-அமைச்சர் அச்சுதானந்தன் மறைவு
கேரள முன்னாள் முதல்-அமைச்சரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமாக வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார் அவருக்கு வயது (101) கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் அச்சுதானந்தன் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. இதனையடுத்து கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்களை சந்தித்தனர். இதன் பின்னர் அச்சுதானந்தன் காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் தமது வீட்டில் இருந்த போது கடந்த ஜூன் 23-ந் தேதி அச்சுதானந்தனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அச்சுதானந்தன் மறைவிற்கு கேரளாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துக்கள்