ராமநாதபுரத்தில் வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு குறித்த கண்காட்சி
வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு குறித்த கண்காட்சியினை துவக்கி வைத்து விவசாயிகள் பார்வையிட்டு பயன்பெற வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வேண்டுகோள் வைத்தார் .
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருத்திட்ட வளாகத்தில் , வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு , பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான கண்காட்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு , பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் முன்னிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையேற்று இயந்திரங்கள் பயன்பாடு , பராமரிப்பு கண்காட்சி அரங்கை திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.கண்காட்சி அரங்கில், வேளாண் இயந்திரங்கள் பயன்பாடு , சோலார் மின் இணைப்பு மூலம் மேம்பாடு குறித்த செயல் விளக்க கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இதன் மூலம் வேளாளர் இயந்திரங்களாய் விலை நிலங்களில் உலவு செய்யும் முறை, நெய் நடவும் முறை, களை எடுக்கும் முறை, விளைநிலங்களில் வரப்பு கட்டுதல் போன்றவற்றிற்கு எவ்வாறு இயந்திரங்களை கையாளுதல் என்பது குறித்து பயிற்சியாளர்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் , தரிசு நிலங்களில் உலவு செய்யும் முறை பயன்பாடற்ற தென்னை மட்டை, கருவேல் மரம் போன்ற பொருள்களை அப்புறப்படுத்துவதற்கான இயந்திரங்களின் செயல்பாட்டு பணி குறித்தும் பயிற்சியாளர்கள் மூலம் விவசாமிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் சோலார் மூலம் மின் இணைப்பு பயன்பாடு குறித்தும் செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டன. கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன். மாவட்ட அளவிலுள்ள விவசாயிகள் இதுபோன்ற கண்காட்சிகளில் இயந்திரங்களின் பயன்பாடு குறித்து தெரிந்து கொண்டும், மேலும் மாநில திட்டத்தின் வேளான் இயந்திரங்கள் பெறுவது குதித்தும் தெரிந்து கொண்டு விவசாயிகள் பயன்பெற்ற வேண்டுமென ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.
பின்னர் , வேளாண் துணை இயந்திரமாக்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் வேளாண் இயந்திரங்களை மாலட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.
தொடர்ந்து, வேளாண்மை துறையின் மூலம் மண் பரிசோதனை செய்வதற்கான நடமாடும் வாகன சேவையினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் , வேளாண்மை பொறியியல் துறை செயற் பொறியாளர் முத்துக்குமார் , வேளாண்மைத்துறை பொறுப்பு இணை இயக்குநர் பாஸ்கரமணியன் , கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் ஜுனு , வேளாண்மைத்துறை உறவி செயற்பொறியாளர்கள் வெங்கடேஷான் , பாண்டியராஜன் , வேள அறிவியல் நிலையம் பேராசிரியர் வள்ளல் கண்ணாள் , செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி , உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட அரசு அலுவலர்கள்
பலர் கலந்து கொண்டனர்.
மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.
கருத்துக்கள்