மாநில தலைவர் பதவி வெங்காயம் போன்றது” - அண்ணாமலை பேட்டி!
அரசியலில் மாநில தலைவர் பதவி வெங்காயம் போல்தான், உரிக்க உரிக்க ஒன்று இருக்காது என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இது தொடர்பாக அவர் பேசியதாவது, “அஜித்குமாரை கைது செய்த காவல்துறையினரே, வாகனத்தின் நம்பர் பிளேட்டை மாற்றி இருப்பது சிபிஐ விசாரணையில் தெரிய வருகிறது. சிபிஐ விசாரணை வைத்துப் பார்த்தால், அரசே தவறு செய்திருப்பதாக தெரிகிறது. சிஸ்டத்தை காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளே தவறு செய்கிறார்கள்.
பந்தோபஸ்து, சட்டம் ஒழுங்கு, நைட் டியூட்டி என தமிழ்நாடு காவல்துறையினருக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. காவல்துறையினரின் பணிச்சுமையை குறைக்க, தமிழ்நாடு முதல்வர் என்ன செய்திருக்கிறார். தெலுங்கானாவை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டு காவல்துறையினரின் சம்பளம் மிக குறைவு. பணம் படைத்தவர்கள், காவல்துறையை தூண்டுகிறார்கள். அஜித்குமார் லாக் அப் மரணத்திற்கு காவல்துறை மீது உள்ள அழுத்தமும் முக்கிய காரணம்” என்றார்.
தொடர்ந்து, பாஜக தேசிய பொதுச்செயலாளர் பதவி உங்களு தர வாய்ப்பு இருக்கிறதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், “பதவியை நோக்கி நான் சென்றதில்லை, மாநில தலைவர் பதவியே வெங்காயம் தான். உரிக்க உரிக்க ஒன்றும் இல்லை, நான் எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை" என்றார்.
கருத்துக்கள்