advertisement

ராமநாதபுரத்தில் எய்ட்ஸ், நோய் தொற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜூலை 21, 2025 10:39 முற்பகல் |

ராமநாதபுரம் மாவட்டத்தில் எச்.ஐ.வி., எய்ட்ஸ், பால்வினை நோய் தொற்று பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை  ராமநாதபுரம் ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் , தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மூலம் எச்.ஐ.வி., எய்ட்ஸ், பால்வினை நோய்தொற்று பற்றிய விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சி , நடமாடும் வாகனம் மூலம் குறும்படம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது .  நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் பங்கேற்று விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சி, வாகனம் மூலம் குறும்படம் வாயிலாக விழிப்புணர்வு மேற்கொள்ளும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இக் கலைக்குழுவினர், விழிப்புணர்வு வாகனம் 25.07.2025 முதல் 31.07.2025 நாட்கள் வரை 20 கிராமங்களுக்குச் சென்று எச்.ஐ.வி., எய்ட்ஸ், பால்வினை நோய் தொற்று, இரத்தக் கொடை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மேற்கொள்ள உள்ளார்கள் என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட மேலாளர் முருகேசன், பொது சுகாதாரத்துறை விரிவாக்க அலுவலர் மரு. சுந்தரி, செய்தி - மக்கள் தொடர்பு மாவட்ட அலுவலர் லெ.பாண்டி, உதவி அலுவலர் நா.விஜயகுமார் உள்பட தொண்டு நிறுவன பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement