காமராஜர் குறித்து அவதூறு வீடியோ பதிவிடுவோர் மீது நடவடிக்கை - தூத்துக்குடி ஆட்சியரிடம் புகார் மனு
நாடார் மக்கள் கூட்டமைப்பை சேர்ந்த துரை என்பவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில்,கடந்த 16 7 2025 அன்று மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் எளிமைக்கு பங்கு விளைவிக்கும் வகையில் திருச்சி சிவா என்பவர் பேசியுள்ளார்.மேலும் இதனைத் தொடர்ந்து பல்வேறு காணொளி வாயிலாகவும்,இணையதளம் வாயிலாகவும் இந்த சம்பவம் பேரதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு நகர் மன்ற தலைவர் வழக்கறிஞர் செல்வகுமார் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் 3 நிமிட காணொளி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த சம்பவம் நாடார் மக்களிடையே பெருந்தலைவர்க்கு காமராஜர் புகழை கெடுக்கும்படியும் மிகுந்த பதிவு உள்ளாக்கி வருகிறது ஆகையால் மாவட்டஆட்சியர் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என மனுவில் தெரிவித்துள்ளார்.
அப்போது அவருடன் சமத்துவ மக்கள் கழகம் மாலை சூடி அற்புதராஜ்,பெருந்தலைவர் மக்கள் கழகம் க. மாரியப்பன்,தமிழக வெற்றிக்கழகம் நிர்வாகி முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார்,இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா, இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வசந்தகுமார் பூசாரிகள் பேரவை மாநில அமைப்பாளர், சாஸ்தா, வீர முருகன், அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை, மாவட்ட பொறுப்பாளர் ஜெயச்சந்திரன், மற்றும் கார்த்திசன் , காமராஜர் நற்பணி இயக்கம் கிருஷ்ணராஜபுரம் அசோக்,பாலா ,பனைக்காட்டு படை கட்சி ஹரிராம், அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துக்கள்