கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளேன்” – நயினார் நாகேந்திரன்.!
சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ”NDA கூட்டணியில் இணைந்து செயல்பட த.வெ.க தலைவர் விஜய்க்கு முன்னதாகவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பிற்கு இனிமேல் தான் பதில் வரும் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நயினார் நாகேந்திரனின் அழைப்புக்கு விஜய் அல்லது தவெகவின் சார்பில் உடனடியாக எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. மறுபக்கம், விஜய் இதுவரை தனது கட்சி தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணியில் இணையுமா என்பது குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால், திமுகவை எதிர்ப்பது தனது முக்கிய இலக்கு என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் கூட, தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி இருப்பதாக நயினார் நாகேந்திரன் உறுதிப்பட தெரிவித்திருந்தார். அதிமுக பாஜக கூட்டணி அமைந்ததால், ஓபிஎஸ், டிடிவி-யின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியது. இந்நிலையில், அவர்கள் பாஜக கூட்டணியில் தொடருவதாக நயினார் கூறியது மூலம், 2026-ல் பாஜகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் இருவரும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது அதிமுகவுக்கு சாதமாக அமையலாம் என்று சொல்லப்படுகிறது.
கருத்துக்கள்