advertisement

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு – ஆர்பிஐ.,் அதிரடி.!

ஜூன் 06, 2025 6:11 முற்பகல் |

 

வங்கிகளுக்கு RBI வழங்கும் கடனுக்கான ரெபோ வட்டி விகிதம் 6%-ல் இருந்து 5.5% ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டில் 3-வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி (RBI) குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழுவின் இருமாத மறுஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா முடிவுகளை அறிவித்தார்.

இதில் மிக முக்கியமான முடிவு ரெப்போ விகிதமாகும், இதில் ரிசர்வ் வங்கி அதை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது, இது சந்தையின் எதிர்பார்ப்புகளை விட மிக அதிகம். ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழு கூட்டத்தில் 0.5% குறைத்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் 5.5%-ஆக குறைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

இதனால், வங்கியில் வாடிக்கையாளர்கள் வாங்கிய வீடு, வாகனம் உள்ளிட்ட குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.  கடந்த 6 மாதங்களில் மட்டும் 6.5%லிருந்து 1% குறைந்து 5.5%-ஆக குறைந்துள்ளது. ஏற்கனவே இரு முறை தலா 0.25% குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் குறைக்கப்பட்டது.

பிப், ஏப்ரல், ஜூன் மாதங்களை சேர்த்து 1% குறைக்கப்பட்டது. அதன்படி, கடந்த பிப்ரவரி 7-ம் தேதி ரெபோ விகிதத்தை 6.5%லிருந்து 6.25% ஆக 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்தது, இது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் முதல் குறைப்பாகும். இதையடுத்து, ஏப்ரல் 9-ம் தேதி மேலும் 25 bps குறைக்கப்பட்டது, இதன் மூலம் ரெப்போ விகிதம் 6.0%ஆக குறைந்தது, இதனை தொடர்ந்து இன்று (ஜூன்6) 0.5% குறைத்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement