கமல்ஹாசனுக்கு 50 கோடிக்கு கடன்! இஎம்ஐ-ல் கார்!
ஜூன் 07, 2025 8:21 முற்பகல் |
தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், தி.மு.க. கூட்டணிக்குப் பக்கம் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், நேற்று தனது வேட்புமனுவை அதிகாரபூர்வமாக தாக்கல் செய்தார்.அதனுடன் சேர்த்து தாக்கல் செய்த சொத்து விவரங்கள் தற்போது முக்கியமாக பேசப்பட்டு வருகின்றன. அதில், ரூ.50 கோடி கடன் இருப்பதாக சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனுக்கு ₹49.67 கோடி வரையிலான கடன்கள் இருப்பதாகவும், அசையும் சொத்துகள் ₹59.60 கோடி, அசையா சொத்துகள் ₹245.86 கோடி என மொத்த சொத்து மதிப்பு ₹305.46 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கமல்ஹாசனுக்கு ரூ.50 கோடி கடன் இருப்பதாக சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்கள்