advertisement

பங்காளி சண்டையெல்லாம் அப்புறம்-டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி

ஜூன் 07, 2025 9:13 முற்பகல் |

 

மதுரையில் அமமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனியார் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கும் பேட்டியளித்து பேசுகையில், ''தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜெயலலிதாவின் கட்சி (அதிமுக) தலைமை ஏற்கும் என சொல்லியிருந்தார். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜெயலலிதாவின் கட்சி தான் தலைமை ஏற்கும். வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் எங்களது கூட்டணி தான் திமுக என்கிற தீயசக்தி கூட்டணிக்கு மாற்றுச் சக்தியாக உறுதியாக இருக்க முடியும். அதில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியாய் இணைய வேண்டும் என்று நினைத்தோம். அதில் ஜெயலலிதாவின் கட்சியே ஒன்று சேர்ந்துள்ளது.அதிமுகவிற்கும் எங்களுக்கும் ஏற்கனவே பங்காளி சண்டை இருக்கிறது. எங்களைப் பொறுத்தவரை இந்த சண்டையையெல்லாம் ஓரம் கட்டி விட்டு திமுகவை வீழ்த்திவிட்டு அந்த சண்டையை பார்த்துக் கொள்ளலாம் என்ற குறிக்கோளோடு தேசிய ஜனநாயக கூட்டணியில் செயல்பட்டிருக்கிறோம். எ

எங்கள் அணிக்கு தான் எடப்பாடி வந்து சேர்ந்திருக்கிறார். நாங்கள் ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம். பாமகவில் அப்பா பையன் இடையே பிரச்சனை நடக்கிறது. அவை முடிந்து பாமக பழைய பலத்தோடு எங்கள் கூட்டணிக்கு வரும். தேமுதிகவும் கூட்டணிக்கு வரும்'' என்றார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement