சாத்தூரில் பறை இசைத்த ஆளுநர் ஆர்என் ரவி
டிச. 12, 2025 10:49 முற்பகல் |
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மேட்டடமலையில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசான் புதிதாகத் தொடங்கியுள்ள பாரதி பறை பண்பாட்டு மையத்தை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று (டிசம்பர் 12) திறந்து வைத்தார்.
பண்பாட்டு மையத் திறப்பு விழாவுக்கு வருகை தந்த ஆளுநர் ரவியை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்தரா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.வரவேற்பு நிகழ்ச்சியின்போது, வேலு ஆசான் பறை இசைக்க, 100-க்கும் மேற்பட்ட பறை இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து பறை இசைத்து ஆளுநருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.அப்போது, எதிர்பாராத விதமாக ஆளுநர் ஆர்.என்.ரவி மேடையேறி, தானும் பறை இசைத்து அங்கிருந்தவர்களை அசத்தினார்.





கருத்துக்கள்