advertisement

லாரியில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

டிச. 15, 2025 3:00 முற்பகல் |

 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 400 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

றுமுகநேரி கடலோர பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதைதொடர்ந்து ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் தலைமையில் போலீசார் கடலோர காவல் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனபோது வேகமாக சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த மினிலாரியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, கூல் லிப்,  உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 30 மூட்டைகளில் கடத்தி சென்றது தெரிய வந்தது. அந்த மூட்டைகளில் இருந்து சுமார் ரூ.10லட்சம் மதிப்பிலான 400 கிலோ புகையிலை பொருட்களை மினிலாரியுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து இதை கடத்தி வந்த ஆறுமுகநேரி ராஜமன்ய புரம் ராஜபாண்டியன் மகன் சாந்தகுமார் (45), அதே பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் அரிகிருஷ்ணன்(48), காசிராஜன் மகன் சங்கர் (34), கோபால்சாமி மகன் மகாலிங்கம் (37), உடன்குடி அருகே உள்ள கொட்டங்காடு ஜெயபாண்டியன் மகன் வசிகரன் (63) ஆகிய 5பேரையும் போலீசார் பிடித்தனர். மேலும் இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 5பேரையும் கைது செய்தனர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement