தூத்துக்குடியில் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
தூத்துக்குடி-மீளவிட்டான் ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டை ரெயில்பாதை பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் ரெயில் இயக்கத்தின் செயல்திறன், பாதுகாப்பு மேம்படுத்தும் வகையில், வருகிற 15-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை இரண்டு ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே யார்டு பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பணிகள் காரணமாக தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் ரெயில்களின் சேவைகள் மாற்றப்பட்டு உள்ளன. அதன்படி வருகிற 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை வாஞ்சி மணியாச்சியில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்படும் வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி (56726), தூத்துக்குடியில் இருந்து 8.30 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி-வாஞ்சி மணியாச்சி (56723) பாசஞ்சர் ரெயிலும், 17, 18, 19, 20, 22, 23-ந் தேதிகளில் நெல்லையில் இருந்து காலை 7.45-க்கு புறப்படும் நெல்லை-தூத்துக்குடி (56722), தூத்துக்குடியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி-நெல்லை (56721) பயணிகள் ரெயிலும், 17-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை வாஞ்சி மணியாச்சியில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும் மணியாச்சி-தூத்துக்குடி (56724), இரவு 10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் தூத்துக்குடி-மணியாச்சி (56725) ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 27.01.2026 வரை பாலக்காடு சந்திப்பில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படும் பாலக்காடு சந்திப்பு - தூத்துக்குடி பாலருவி எக்ஸ்பிரஸ் (16792) நெல்லை-தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 15-ந் தேதி முதல் 28.01.2026 வரை தூத்துக்குடி-பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடி-நெல்லை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. வருகிற 21, 22, 23-ந் தேதிகளில் தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் (16235) தூத்துக்குடி-மணியாச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. 20, 21, 22-ந் தேதிகளில் மைசூரு-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (16236) ரெயில் வாஞ்சிமணியாச்சி-தூத்துக்குடி இடையேயும் ரத்து செய்யப்படுகிறது. 19-ந் தேதி ஓகாவில் இருந்து புறப்படும் ரெயில் (16236) 21.12.25 அன்று கோவில்பட்டியுடன் நிறுத்தப்படும். அன்று இரவு 11.35 மணிக்கு கோவில்பட்டியில் இருந்து ஓகா ரெயில் (19567) இயக்கப்படும்.
20, 21, 22-ந் தேதிகளில் சென்னையில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர்-தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் (12693) 21, 22, 23-ந் தேதிகளில் வாஞ்சி மணியாச்சியில் நிறுத்தப்படும். 21, 22, 23-ந் தேதிகளில் வாஞ்சி மணியாச்சியில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு செல்லும். இந்த ரெயில் தூத்துக்குடி-மணியாச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.





கருத்துக்கள்