advertisement

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி : புதுப்பாலப்பட்டு அரசு பள்ளி மாணவர் பெற்று சாதனை

டிச. 14, 2025 2:51 முற்பகல் |

 

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டி சேலம் பத்மவாணி கலைக் கல்லுாரியில் கடந்த 9ம் தேதி நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

சங்கராபுரம் அடுத்த புதுப்பாலப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர் பாலாவிகாசோ.இவர் ட்ரம்ஸ் இசைக்கருவி போட்டியில் கலந்துகொண்டு மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்தார்.மாநில அளவில் வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர் பாலாவிகாசோவை பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement