தாயுமானவர் திட்டத்தில் 43,476 பேர் பயன் : தூத்துக்குடி ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 43,476 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்றுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தில்
65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 18 வயதிற்குட்பட்டவர்களை கொண்ட 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களையும் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள், ஒரு நபர் மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்ப அட்டைதாரர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள், மூன்றாம் நபரின் உதவி தேவைப்படும் குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளர்கள் ஆவார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டையபுரம், கயத்தார், ஏரல் ஆகிய 10 வட்டங்களிலும் கூட்டுறவுத்துறை சார்பாக கிராமப்புறங்களில் உள்ள 30,437 குடும்ப அட்டைகளும், நகர்புறங்களில் உள்ள 12,181 குடும்ப அட்டைகளும், இதர கூட்டுறவுத்துறை (பனை வெல்லம்) சார்பாக 823 குடும்ப அட்டைகளும், மகளிர் சுய உதவிக்குழுகான 35 குடும்ப அட்டைகள் என மொத்தம் 43,476 தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்றுள்ளனர்.
இந்த சிறப்பான திட்டத்தின் மூலம் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று பொருட்கள் வழங்கும் சிறப்பான தாயுமானவர் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற பயனாளிகள் தங்களது நிறைந்த மனதுடன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.





கருத்துக்கள்