டிச 14 ல் இலவச எண்டோஸ்கோபி முகாம்
எல்சி மருத்துவ அறக்கட்டளை அதன் 50வது (புராஜக்ட் YES) இலவச எண்டோஸ்கோபி முகாமை ARAM (பல்சமய நல்லுறவு இயக்கம்) உடன் இணைந்து டிசம்பர் 14, 2025 (ஞாயிறு) அன்று ரத்னபுரியில் உள்ள லாலா மஹாலில் நடத்துகிறது.
டாக்டர் ராஜன் தலைமையிலான 30 பேர் கொண்ட மருத்துவக் குழு பொதுமக்களுக்கு இலவச எண்டோஸ்கோபி மற்றும் ஆலோசனையை வழங்கும். அனைத்து வகையான இரைப்பை மற்றும் மகளிர் நோய் பிரச்சினைகளுக்கும் இலவச ஆலோசனை அளிக்கப்படுகின்றன. இதுவரை தமிழ்நாடு மற்றும் கேரளாவை உள்ளடக்கிய 49 முகாம்களை நடத்தி ELCE குழு 7850 இலவச எண்டோஸ்கோபிகளைச் செய்து, அறிகுறியற்ற மக்களிடையே 19 ஆரம்பகால வீரியம் மிக்க கேன்சர் கட்டிகளை கண்டறிந்துள்ளது.
ARAM நிறுவனர் முகமது ரபிக் முகாமை ஒருங்கிணைக்கிறார். மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளார் ஆகியோர் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்குகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





கருத்துக்கள்