advertisement

பரமக்குடியில் தேசிய மக்கள் நீதிமன்றம்

டிச. 13, 2025 11:02 முற்பகல் |

பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது .

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின்  தலைவரும் , முதன்மை மாவட்ட நீதிபதி  மெகபூப்அலிகான்  உத்தரவின் படி ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.  இதில் 426 வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்வு தொகையாக ரூபாய். 2,87,02,524/= (இரண்டு கோடியே என்பது ஏழு லட்சத்து இரண்டாயிரத்து ஐநூறு   இருபத்து நான்கு) அறிவிக்கப்பட்டது.

இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி பாலமுருகன் , சார்பு நீதிபதி அறிவு தலைமை தாங்கினர். குற்றவியல் நீதிபதி ஐயப்பன் முன்னிலை வகித்தார்.  அமர்வு வழக்கறிஞர்கள் திருமூர்த்தி , கோபால் பாண்டி கலந்து கொண்டனர். மூத்த இளம் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாட்டினை வட்ட சட்ட பணிகள் குழுவின் நிர்வாக உதவியாளர் முத்து விஜயன் , சட்ட தன்னார்வலர்கள் சிறப்பாக  செய்திருந்தார்கள்.

மாமுஜெயக்குமார்.
மாவட்ட செய்தியாளர்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement