இந்தியா வந்தார் லியோனல் மெஸ்ஸி
கொல்கத்தாவிலிருந்து இன்று ஹைதராபாத்திற்கு வரும் மெஸ்ஸி, உப்பலில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி. தற்போது 38 வயதான மெஸ்ஸி, கால்பந்து விளையாட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
இந்நிலையில் கால்பந்து விளையாட்டில் உலகப் புகழ்பெற்ற மெஸ்ஸி, இந்தியாவிற்கு வருகை தந்துள்ளதுடன், ஹைதராபாத், கொல்கத்தா, அஹமதாபாத், மும்பை மற்றும் டெல்லியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 2.20 மணிக்கு தனி விமானம் மூலம் கொல்கத்தா வந்தடைந்த லியோனல் மெஸ்ஸிக்கு, விமான நிலையில் திரண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் லியோனல் மெஸ்ஸி பங்கேற்கவுள்ளார். அந்நிகழ்ச்சியின் போது அவர் கொல்கத்தாவை சேர்ந்த கால்பந்து வீரர்கள், கிளப் அணி வீரர்களுடன் கலந்துரையாடவுள்ளார். அதனை தொடர்ந்து சந்தோஷ் கோப்பையை வென்ற மேற்கு வங்க அணியை மெஸ்ஸி கவுரவிப்பதுடன், அணி வீரர்களுக்கு ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.





கருத்துக்கள்