பிரகாசபுரம் அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா!
நாசரேத் அருகே உள்ள பிரகாசபுரம் அன்னை தெரேசா தொண்டு நிறுவனத்தின் 20 வது ஆண்டு விழாவில் சிறுவர் இல்லத்தில் மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கு நாசரேத் வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவர் ஞானையா தலைமை வகித்தார். வடலிவிளை பள்ளி
ஆசிரியர் மெர்வின், தூத்துக்குடி ரியல் எஸ்டேட் அதிபர் ஜெகன், நாசரேத் பேரூராட்சி துணைத்தலைவர் அருண் சாமுவேல், பேரூராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் ஐஜினஸ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நற்செய்தி பணிக்குழு இயக்குனர் பிரான்சிஸ் அடிகளார் ஜெபித்து விழாவை தொடங்கி வைத்தார். ஆரம்பமாக தோப்பூர் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வன் அனைவரையும் வரவேற்றார். பிரகாசபுரம் பங்குத்தந்தை ஆரோக்கிய அமல்ராஜ் இறைஆசி வழங்கினார்.பரணி பிராய்லர்ஸ் உரிமையாளர் கிருஷ்ணராஜ், உதுமான், பிரவீன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். சிறுவர் இல்ல மாணவ_ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது
இதைத் தொடர்ந்து ஸ்னோ ரியல் எஸ்டேட் உரிமையாளர் இருதய ஞான ரமேஷ் பொருளாதாரத்தில் பின் தங்கிய 120 மாணவ_ மாணவிகளுக்கு புத்தாடைகள் வழங்கினார்.
இதில் முன்னாள் நாசரேத் பேரூராட்சி தலைவர் ரவி செல்வகுமார், முன்னாள் மூக்குப்பீறி ஊராட்சி மன்ற உறுப்பினர் கலையரசு, சகாயரூபன், கவுன்சிலர் அதிசயமணி மற்றும் அருட்சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிறைவாக அன்னை தெரேசா தொண்டு நிறுவன செயலாளர் காட்வின் நன்றி கூறினார்.
விழா ஏற்பாடுகளை அன்னை தெரேசா தொண்டு நிறுவன தலைவர் அந்தோணி ராஜா செய்திருந்தார்.





கருத்துக்கள்