advertisement

மத்திய அரசை விட கூடுதல் நிதி ஒதுக்கிய தமிழகஅரசு -அமைச்சர் கீதாஜீவன்

டிச. 15, 2025 5:32 முற்பகல் |

மத்திய அரசு ஓதுக்கீடு செய்வதை விட தமிழக அரசு கூடுதலாக 300கோடி மாற்றுத்திறனாளிகள் துறைக்கு ஓதுக்கீடு செய்துள்ளது. நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.

தூத்துக்குடி விகாசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலவாழ்வுச் சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கம் இணைந்து ஒருங்கிணைந்த உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில்  மாற்றுத்திறனாளிகளுக்கு கலைஞர் ஆட்சியில் தான் நலவாாியம் அமைக்கப்பட்டது. அதேபோல் மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்பட்டது. அவா்வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு குறைபாடுகள் இருப்பவா்களுக்கு வீல் சோ்கள் அமா்ந்திருப்பதற்கு ஏற்றாற்போல் வழங்கப்படுவது மட்டுமின்றி 3 சக்கர வாகனமும் வழங்கப்படுகிறது. 

நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப இந்த அரசு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. தமிழகத்தில் இருக்கின்ற மாற்றுத்திறனாளிகள் எல்லாருடைய வாழ்வு ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக யாரையும் விடுபடாமல் எல்லா பகுதிகளிலும் அவா்களை கண்டறிய அரசு சாா்ந்த பணியாளா்கள் சென்று வருகிறாா்கள். ஓன்றிய அரசு ஓதுக்கீடு செய்வதைவிட தமிழக அரசு இந்த துறைக்கு 300 கோடி ஓதுக்கீடு செய்துள்ளது. அதே போல் மாற்றுத்திறனாளிகள் வீட்டு மணை கேட்டு மாவட்ட நிா்வாகத்திடம் மனு அளித்தால் இட ஓதுக்கீடு செய்து பட்டா வழங்கி கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கும் பணம் வழங்கப்படுகிறது. 

விபத்தின் மூலம் பாதிக்கப்பட்டவா்களுக்கும் உதவித்தொகை வழங்குவது மட்டுமின்றி அவா்களுடன் இருக்கும் உதவியாளா்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விபத்து இல்லாத நிலையை உருவாக்குவோம் கா்ப்பிணி பெண்கள் நல்ல சத்தாண உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம் எல்ேலாா் வாழ்வும் சிறக்க மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினாா். 

நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங் கவுன்சிலா் ஆறுமுகம், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி, தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலவாழ்வு சங்க மாநில தலைவர் மருத பெருமாள், செயலாளர் ஜெயராஜ், பொருளாளர் செல்வகுமரன், சங்கத்தின் கிளை அமைப்பு தலைவர்கள் அற்புதராஜ், மொட்டையசாமி, அய்யனார், ராமகிருஷ்ணன்,  ஆறுமுகம், பொன்ராஜ், சின்னத்துரை, பிச்சாண்டி, தமிழ்செல்வி, பெரியசாமி, முத்து மாடசாமி,  சுல்தான், கமல் ஜவகர், அந்தோணி ராஜ், ராமகிருஷ்ணன், தூத்துக்குடி காது கேளாதோர் முன்னேற்ற நலவாழ்வு சங்கத்தின் தலைவர் பேச்சிமுத்து, துணை தலைவர் கமல் தனசேகர், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் சின்னதுரை, சகா கலை குழுவைச் சேர்ந்த முனைவர் சகா. சங்கர் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement