advertisement

யூடியூபர் முக்தாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

டிச. 15, 2025 6:12 முற்பகல் |

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி முத்தையாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக தவெக உள்பட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றனா். 

தூத்துக்குடி காமராஜரை தரக்குறைவாக விமர்சனம் செய்த யூடியூபர் முக்தார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி முத்தையாபுரம் பல்க் பஜாரில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முத்தையாபுரம் நாடார் சங்கம் மற்றும் சுற்று வட்டார நாடார் சங்கங்கள், இயக்கங்கள் இணைந்து நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் நாடார், பனங்காட்டு மக்கள் கழகம் மாநில வழக்கறிஞரணி செயலாளர் சிலுவை நாடார், காமராஜர் லட்சிய பேரவை பிரசன்னா, புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மாாிச்செல்வம், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட ெசயலாளர் அற்புதராஜ், தமிழக வெற்றி கழக மாவட்ட பொறுப்பாளா் அஜிதாஆக்னல், உள்பட பல்ேவறு அமைப்புகளை சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா். 

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.பி. மாரியப்பன் நாடார் பேசுகையில் கர்மவீரர் காமராஜரை தகுதியற்றவர்கள் எல்லாம் தற்போது விமர்சனம் செய்து தங்களை விளம்பரப் படுத்திக் கொள்கிறார்கள் மனிதக் கடவுளாக வாழும் கர்மவீரரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக எம்பி திருச்சி சிவா பெருந்தலைவரை இழிவாக பேசினார். இது குறித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் திமுக அரசு இதுவரை திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த தைரியத்தில் முக்தார் காமராஜரை இழிவாக பேசி உள்ளார். தவறு செய்தவர்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால் இந்த நிலை தொடர்கிறது ஆகையால் காமராஜரை இழிவு படுத்துவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும் இதற்கு தமிழக அரசை உடனடியாக தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று எஸ்.பி. மாரியப்பன் பேசினார்.

பெருந்தலைவர் மக்கள் நலச்சங்க உறுப்பினர்கள் ரமேஷ், முருகேசன், துரைசாமி, செல்வம், புஷ்பராஜ், சாமுவேல், வேல்முருகன், வக்கீல் ஜெயபால், நாராயணன், சிவா, குமார், கணேசன் தர்மகத்தா, பெனிட்டோ உள்பட பலா் கலந்து கொண்டனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement