எட்டு மாதங்களாக வீணாகும் குடிநீர் ; சரி செய்ய தேமுதிக நிர்வாகி கோரிக்கை
டிச. 15, 2025 3:11 முற்பகல் |
திருச்செந்தூர் திருநெல்வேலி நெடுஞ்சாலை ஆழ்வார்திருநகரி பேரூராட்சி திருக்கோளூர் ஊராட்சி கக்கன் ஜி நகர் அருகில் எட்டு மாதங்களாக குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி கொண்டு இருக்கிறது. அரசு அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி அவ்வழியாக பயணிக்கின்றனர்.இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க தேசிய முற்போக்கு திராவிட கழக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏரல் அரியபுரம் இசக்கிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.






கருத்துக்கள்