advertisement

கருணைக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் :

டிச. 15, 2025 10:57 முற்பகல் |

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ள அரசம்பட்டு, புதுப்பாலப்பட்டு, மோட்டாம்பட்டி ஆகிய கிராமங்களில் அதிக அளவில் கருணைக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 
குறைந்த தண்ணீர் செலவில் மூன்று மாத பயிரான கருணைக்கிழங்கு, நன்கு வளர்ந்து அறுவடை பருவத்தில் திருவண்ணாமலை, வேலுார், திருச்சி, கடலுார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மொத்த வியாபாரிகள் கிலோ ரூபாய் இருபத்தி ஐந்து முதல் ரூபாய் முப்பது வரை விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதனால் நல்ல லாபம் கிடைப்பதால், சங்கராபுரம் பகுதி விவசாயிகள் கருணை கிழங்கு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement