advertisement

தேர்தல்ஆணையத்தை கைப்பாவையாக வைத்திருக்கிறது பாஜக: சிபிஎம் சண்முகம் குற்றச்சாட்டு

டிச. 12, 2025 10:36 முற்பகல் |

 

தேர்தல்ஆணையத்தை கைப்பாவையாக வைத்திருக்கிறது பாஜக என தூத்துக்குடியில் மா கம்யூகட்சியின் மாநில செயலாளர் சண்முகம் குற்றம் சாட்டினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) லிபரேசன் கட்சி சார்பில் தூத்துக்குடியில் 12வது மாநில மாநாடு இன்று தொடங்கி 14ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.  மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு பேசுகையில், "பாஜக அரசாங்கம் தன்னுடைய மதவெறி நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நிறைவேற்றுவதற்கு சாம, பேத, தண்டம் என்று சொல்லக்கூடிய அனைத்து விதமான வழிகளிலும் அவர்கள் தீவிரமான முயற்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய தேர்தல் ஆணையத்தை அவர்களுடைய கைப்பாவையாக அவர்கள் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தினுடைய மிக முக்கியமான அங்கமாக இருக்கக்கூடிய இந்திய பாராளுமன்றத்தை ஜனநாயகத்திற்கு விரோதமான முறையிலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குள் பேசுவதற்கு அனுமதிக்காமல் தங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்ற திமிர்தனத்தில், எதை வேண்டுமானாலும் சட்டமாக்க முடியும், எதையும் வேண்டுமானாலும் எங்களால் செய்ய முடியும் என்ற முறையில் ஆட்சியாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் 

நம்முடைய இடதுசாரிகளின் ஒற்றுமை ஒருங்கிணைந்த செயல்பாடு இது ஒரே அணிவகுப்பாக செயல்படுவதன் மூலமாகத்தான் இத்தகைய தாக்குதலில் இருந்து மக்களையும் நாட்டையும் பாதுகாக்க முடியும். மதவெறி சக்திகளை எதிர்த்து போராடுவதற்கு மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமை என்பது மிக அவசியம் அந்த வகையில் மதவெறி சக்திகளுக்கு எதிராக மதசார்பற்ற கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க ஒன்றுபட்டு ஒரு போராட்டத்தை நடத்துவதற்காக முயற்சி இந்திய நாடு முழுவதும் நடக்கிறது நவீன தாராளமய கொள்கைக்கு மாற்றாக இடதுசாரி கொள்கையை உழைக்கும் மக்களின் நலனை முன்னிறுத்தக்கூடிய ஒரு பொருளாதாரக் கொள்கையை மாற்றிக் கொள்கையை நாம் முன் வைக்க வேண்டி உள்ளது பார்த்து கொள்கையை முன்வைத்து இடதுசாரிகளின் அணிவகுப்பை உருவாக்க வேண்டும் என்றார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement