நெல்லையில் 3 நாட்கள் இலவச மருத்துவ முகாம்
அன்னை வேளாங்கன்னி பன்னோக்கு மருத்துவமனை திருநெல்வேலி மரு.பிரான்சிஸ் ராய் நினைவாக மெகா ஆர்தோ மற்றும் பிசியோதெரப்பி இலவச மருத்துவ முகாம் டிசம்பர் மாதம் 12,13,14,2025 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெறுகிறது.
ரூபாய்.5000 மதிப்புள்ள கீழ்காணும் பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. எலும்பு அடர்த்தி பரிசோதனை,முடக்குவாத யூரிக் அமிலம் பரிசோதனை, எலும்புமருத்துவரின் சிறப்பு ஆலோசனை, மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், தேவைபடுவோருக்கு எக்ஸ் ரே மற்றும் பிசியோதெரப்பி வழங்கப்படுகிறது.இம்முகாமினை மரு.அபுபக்கர், திரு.முகமதுரியாஷ்,.ஜெரால்டு, பெலிக்ஸ்
தொடங்கி வைத்தனர்.
முகாமில் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை இயக்குநர்கள் ஜிஜி செல்வன் மற்றும்
அந்தோணிராஜ், வாணிராய், பானுமதி ராஜ் ,பால முருகன், ஜேன் செல்வன், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டார்கள். மேலும் மூன்று நாட்கள் (டிசம்பர் 12,13,14! 2025) நடைபெறும் இந்த இலவசமருத்துவமுகாம்மில் பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளபடுகிறது.





கருத்துக்கள்