advertisement

தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

ஜூன் 21, 2025 3:19 பிற்பகல் |

எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்கக் கூடாது என நினைப்பவர்கள் தான் தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள் என்று மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அய்யன் வள்ளுவர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்து வைத்தார்.

அதனை தொடர்ந்து ஸ்டாலின் பேசியதாவது:எல்லோரும் முன்னேறுவது சிலருக்குப் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்கக் கூடாது என நினைப்பவர்கள் தான் தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள்.கவனிப்பார் இல்லாமல் இருந்த வள்ளுவர் கோட்டத்தை புதுப்பொலிவுடன் மீட்டெடுத்துள்ளோம்.அய்யன் வள்ளுவன் என்ற இந்த அரங்கத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.அரசியலுக்காக, தேர்தலுக்காக செய்யவில்லை. உள்ளார்ந்து செய்கிறேன்.நான் உங்களில் ஒருவன். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

கருத்துக்கள்

கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் அநாகரிக மற்றும் பிறர் மனத்தை மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை தவிர்க்கவும்
advertisement
advertisement